/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்தமானது ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்புவாசிகள் நிம்மதி
/
சுத்தமானது ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்புவாசிகள் நிம்மதி
சுத்தமானது ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்புவாசிகள் நிம்மதி
சுத்தமானது ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்புவாசிகள் நிம்மதி
ADDED : மே 14, 2025 06:49 AM

திருப்பூர்; திருப்பூர், பல்லடம் ரோடு ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் துாய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதி சீரமைப்பு செய்யப்பட்டது.
திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து, 'தினமலர்' நாளிதழில் 'குடியிருப்போர் குரல்' என்ற தலைப்பில் சிறப்பு செய்தி வெளியானது. அதில், அங்குள்ள கழிவு நீர் வடிகாலில் கழிவு நீர் தேங்கி நிற்பதும், ரோட்டோரம் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. இதையறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதியில் துாய்மை பணி மேற்கொண்டனர்.
இது குறித்து, குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் தங்கவேல், மந்திரியப்பன் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:
எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள இப்பிரச்னை குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக எங்களை தொடர்பு கொண்ட வார்டு கவுன்சிலர், மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து இன்று (நேற்று) காலை துாய்மைப் பணியாளர்கள் களமிறங்கி, அவற்றை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். 'தினமலர்' நாளிதழ் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.