ADDED : ஆக 04, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'துப்புரவாளன்' அமைப்பு சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் மத்தியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நேற்று குமரன் கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். துப்புரவாளன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பேசினர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.