/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபர் சங்கம் சார்பில் நுாலகத்தில் துாய்மை பணி
/
வாலிபர் சங்கம் சார்பில் நுாலகத்தில் துாய்மை பணி
ADDED : ஆக 21, 2025 11:36 PM

அவிநாசி; அவிநாசி, பாரதிதாசன் வீதியில், 1954ம் ஆண்டு முதல் நுாலகம் செயல்பட்டு வருகிறது. 7,500க்கும் மேற்பட்ட நுால்களுடன், அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, 7 ஆயிரம்வாசகர்களுடன் செயல்படுகிறது.
தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து, நுாலக கட்டடத்தைபுனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள், நுாலக வளாகத்தில் துாய்மை பணிகள் செய்து வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டனர். இதனை, மாவட்ட நுாலக அலுவலர் ராஜன், கிளை நுாலகர் சரவணன் ஆகியோர் மேற்பார்வை செய்தனர். நிகழ்ச்சியில் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல், பொருளாளர் தங்கராஜ், பொறுப்பாளர்கள் நந்தகோபால், ரவீந்திரன், ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

