நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம், மங்கலம் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டியிருந்தன. திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள திட்டமிட்டனர்.
இச்சங்க தலைவர் இளங்கோவன், பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க செயலாளர் ஆறுமுகம், லோகத்தீஸ்வரன் ஆகியோர் இம்முயற்சியை மேற்கொண்டனர். முட்செடிகள், புதர்கள் அகற்றப்பட்டன. தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.