sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்

/

காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்

காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்

காலநிலை மாற்றம் ... இனியும் உதாசீனம் வேண்டாம்


ADDED : ஜூன் 13, 2025 11:01 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மழை பெய்ய வேண்டிய நேரத்துல, ஏப்ரல், மே மாசம் மாதிரி, இப்படி வெயில் அடிக்குதே... ஏன் தான் இப்படியோ?'' இந்த புலம்பலை பல இடங்களில் கேட்க முடிகிறது.

''இந்த புலம்பலின் பின்னணியில், உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றம் இருக்கிறது,'' என்று கூறுகிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ.

புவி வெப்பம்குறையுமா?


அவர் கூறியதாவது: காலநிலை மாற்றம் என்பது, அணுகுண்டு வெடிப்பிற்கு சமமானது. புவியின் வெப்பம், கடந்த, 150 ஆண்டுகளில், 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருக்கிறது என, சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில், பூமியின் வெப்பநிலை, 2 முதல், 3 டிகிரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2050க்குள், புவி வெப்பத்தை, 1.5 டிகிரி சென்டி கிரேடு அளவில் கட்டுப்படுத்த, ஐ.நா., சபையும், உலக காலநிலை மாற்ற அமைப்பும் போராடி வருகின்றன. ஆனால், இன்றயை அறிவியல் ஆய்வறிக்கைகளை பார்க்கும் போது, 2030க்குள் இந்நிலையை எட்டி விடுவோம் என்றே தோன்றுகிறது.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை


காலநிலை மாற்றத்தை புரிந்துகொள்ள, ஆய்வறிக்கையை ஆராய வேண்டிய அவசியமில்லை. மாறாக, பனிக்காலம் எந்தளவு குறைந்திருக்கிறது என்பதை கணக்கிட்டாலே போதும். மார்கழி மாதம், உறைபனி காலம் என்பதெல்லாம் போய், ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே பனி பொழிவதை காண முடிகிறது. புவியின் வெப்பநிலை தற்போதுள்ள நிலையில், 2050க்குள், 2 முதல், 3 டிகிரி அளவுக்கு உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கோதுமை, நெல் உள்ளிட்ட உணவு பொருள் விளைச்சல் பாதிக்கும்; உணவுப்பஞ்சம் வரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பசுமைப்பரப்பை அதிகரிப்பதே தீர்வு


''காலநிலை மாற்றத்தால் கொசு போன்ற பூச்சியினங்கள் பெருவாரியாக இனப்பெருக்கம் செய்யும். மலேரியா, டெங்கு நோய் ஏற்படும். தற்போது உலகளவில் பரவி வரும் உருமாறிய கொரோனா கூட, காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படுவது தான்.

வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும் போது, மனித மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது; இதனால், துாக்கம் பாதிக்கிறது. பல்வேறு உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; இந்த பாதிப்பை தவிர்க்க, பூமியில் பசுமை பரப்பை அதிகப்படுத்த வேண்டும்'' என்று கூறுகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக்கருத்தாளர் ராஜூ.






      Dinamalar
      Follow us