/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீதோஷ்ண நிலை மாற்றம்; தக்காளி வரத்து சரிவு விலையும் சரிவதால் பாதிப்பு
/
சீதோஷ்ண நிலை மாற்றம்; தக்காளி வரத்து சரிவு விலையும் சரிவதால் பாதிப்பு
சீதோஷ்ண நிலை மாற்றம்; தக்காளி வரத்து சரிவு விலையும் சரிவதால் பாதிப்பு
சீதோஷ்ண நிலை மாற்றம்; தக்காளி வரத்து சரிவு விலையும் சரிவதால் பாதிப்பு
ADDED : டிச 27, 2024 11:10 PM

உடுமலை, ; பனி பொழிவு, பருவ மழையால் தக்காளி சாகுபடி பாதித்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருவதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், ஆண்டு முழுவதும், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், செடி மற்றும் கொடி முறையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, தக்காளி செடிகள் பாதித்தும், காய்கள் நோய் தாக்கியும், அழுகியும் பாதிப்பு ஏற்பட்டது. மழைக்கு தப்பித்த ஒரு பகுதிகளில் மட்டும், தக்காளி செடிகள் உள்ளது. இதனால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ளது.
வழக்கமாக, 14 கிலோ எடை கொண்ட, 30 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில், தற்போது, 2 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்து காணப்படுகிறது. மழை, பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களினால், தக்காளி பாதித்துள்ளதோடு, நீண்ட துாரம் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால், வெளி மாவட்ட வியாபாரிகள் வருகையும் பெருமளவு குறைந்துள்ளது.
இதனால், உடுமலை சந்தையில் தக்காளி விலை சரிவை சந்தித்து, 14 கிலோ பெட்டி, 200 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
செடி முறை தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளரும் செடிகள் மண்ணில் விழாமல், குச்சி, கயிறு மற்றும் பந்தல் முறை என, கொடி முறை சாகுபடிக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
தொடர் மழை காரணமாகவும், வைரஸ் நோய் தாக்குதல் காரணாகவும் தக்காளி செடிகள் பாதித்துள்ளது. கொடி முறையில் மழைக்கு தப்பிய தக்காளி மட்டுமே, தற்போது விற்பனைக்கு வருகிறது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மகசூல் பெருமளவு குறைந்து, வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில், வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை குறைவு மற்றும் பழங்கள் மழைக்கு தாங்காதது என்பதால், விலை சரிந்துள்ளது. இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.