/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம்: தொழில்முனைவோருக்கு அழைப்பு
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம்: தொழில்முனைவோருக்கு அழைப்பு
'மக்களுடன் முதல்வர்' திட்டம்: தொழில்முனைவோருக்கு அழைப்பு
'மக்களுடன் முதல்வர்' திட்டம்: தொழில்முனைவோருக்கு அழைப்பு
ADDED : ஜன 01, 2024 10:54 PM
உடுமலை:தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில், செயல்படுத்தப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களை, மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கொண்டு சேர்க்கும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், 18ம் தேதி முதல், வரும், 5ம் தேதி வரை, 13 அரசுத்துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், முகாம் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முகாம் நடக்கிறது. முகாமில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மையத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும், சுய வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான அரங்கும் அமைக்கப்படுகிறது.
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகிய திட்டங்கள் வாயிலாக, தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோர் இம்முகாம்களில் பங்கேற்று, அரசு மானிய திட்டங்களில் தொழில் துவங்கி பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

