/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு துறை துணை பதிவாளர்கள் இடமாற்றம்
/
கூட்டுறவு துறை துணை பதிவாளர்கள் இடமாற்றம்
ADDED : அக் 23, 2024 06:52 AM
திருப்பூர் : தமிழகத்தில் கூட்டுறவு துறையில், கூட்டுறவு சார் பதிவாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் துணை பதிவாளர்களுக்கு இடமாறுதல் செய்தும், கூட்டுறவு துறை கூடுதல் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கூட்டுறவு துறையில் துணை பதிவாளர்களாக பல்வேறு மாவட்டம் மற்றும் பிரிவுகளில் மூன்றாண்டு பணியாற்றிய, 37 பேர் வேறு மாவட்டம் மற்றும் பணியிடங்களுக்கு மாறுதல் செய்து கூட்டுறவு துறை கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பதவி உயர்வு
அதேபோல் கூட்டுறவு துறையில், கூட்டுறவு சார் பதிவாளர்களாகப் பணியாற்றி வரும், 100 பேருக்கு, துணை பதிவாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இடமாறுதல் செய்யப்பட்ட துணை பதிவாளர்கள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கும் இவர்களை நியமனம் செய்து, கூட்டுறவு துறை கூடுதல் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.