ADDED : டிச 26, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 64 வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் தடகள போட்டியில் பதக்கங்களை வென்றனர். தேசிய அளவில், பத்து பேர் பதக்கங்க ளை வென்றனர். இருவர் சர்வதேச அளவில் போட்டிக்கு தேர்வு பெற்றனர். இவர்களைப் பதக்கம் பெறவைத்த 15 தடகள பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா, திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடந்தது.
தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கிட்ஸ் கிளப் சேர்மன் மோகன் கார்த்திக், துணை தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது, விளையாட்டு நலன் அலுவலர் ரகுகுமார், உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

