/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.67.50க்கு விற்பனை
/
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.67.50க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.67.50க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.67.50க்கு விற்பனை
ADDED : அக் 07, 2025 12:54 AM

உடுமலை:மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ. 67.50 க்கு விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 1,852.50 கிலோ எடையுள்ள, 4,107 தேங்காய்களை, 19 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.67.50 க்கும், குறைந்தபட்சமாக, ரூ.64 என சராசரியாக, ரூ.66க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 520 ஆகும்.
அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 12 விவசாயிகள், 12 மூட்டை அளவுள்ள, 134.40 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.
இதில், ஏழு வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிகப்பட்சமாக, கிலோ ரூ. 220க்கும், குறைந்தபட்ச விலையாக, ரூ.180 என, சராசரியாக, ரூ.210 க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 27 ஆயிரத்து, 321 என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.