ADDED : பிப் 17, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயத்தில் தென்னை நோய் தாக்குதல் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அமைச்சர் சாமிநாதன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
தென்னையில் நோய் தாக்கம், பூச்சி கட்டுப்பாடு, உரமேலாண்மை; பூச்சி மருந்து உபயோகத்தை தவிர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வெள்ளை ஈ தாக்குதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தென்னையில் நோய் தாக்கம், தடுப்பு முறைகள் குறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன், வேளாண் பல்கலை தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜமாணிக்கம் உடனிருந்தனர்.