/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய்; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய்; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 23, 2024 11:41 PM

பல்லடம்: பல்லடம் அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி, காளிபாளையம் பகுதி ரேஷன் கடை முன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வகித்தார். மாநில தலைவர் சண்முகம், சாமளாபுரம் கிளை தலைவர்கள் பத்மநாபன், செல்வராஜ், மாநகர் மாவட்ட தலைவர் கோகுல் ரவி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்து பேசுகையில்,''தென்னை விவசாயம் வாழ்வாதாரம் காக்க, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் வாயிலாக தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். இருப்பினும், சோதனை அடிப்படையில் நான்கு மாவட்டங்களில் வினியோகிக்கப்படும் என்று கூறிய தமிழக அரசு, இன்று வரை பாமாயிலை நிறுத்தவோ, தேங்காய் எண்ணெயை வினியோகிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்நாட்டு எண்ணெய் வித்துக்களை ஊக்குவிக்கும் வகையில், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தேங்காய் எண்ணெயை வினியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார்.