/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் எண்ணெயை மானிய விலையில் ரேஷனில் வழங்கணும்
/
தேங்காய் எண்ணெயை மானிய விலையில் ரேஷனில் வழங்கணும்
ADDED : அக் 18, 2024 10:20 PM
உடுமலை : ரேஷன் கடையில் பாமாயில் விற்பனையை தடை செய்து தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வினியோகிக்க வேண்டும் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், முப்பெரும் விழா தெக்கலுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.
விழாவில், மான், மயில், காட்டுப்பன்றி உள்பட வனவிலங்குகளின் பாதிப்பிலிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நீதிபதி சிவசுப்பிரமணியம் பரிந்துரையை ஏற்று கள் கடையை திறக்க வேண்டும்.
பால் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும். ரேஷன் கடையில் பாமாயில் விற்பனையை தடை செய்து தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வினியோகிக்க வேண்டும்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.