/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை செல்லும் ரயில் இயக்கம் மாற்றம்
/
கோவை செல்லும் ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : மே 22, 2025 11:35 PM
திருப்பூர் : திருப்பூரை கடந்து கோவை வழியாக கேரளா செல்லும், சபரி, ஆலப்புழா, மங்களூரு உட்பட, ரயில்கள் இயக்கம் மேம்பாட்டு பணி காரணமாக, இரண்டு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், ரயில்கள் கோவை செல்லாமல், இருகூர் - போத்தனுார் வழியில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், செகந்திரபாத் - திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் (எண்:17230), சென்னை, தாம்பரம் - மங்களூரு எக்ஸ்பிரஸ் (எண்:16159) வரும், 24 மற்றும், 26ம் தேதியும், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (எண்:13351), பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (எண்:22644) இன்றும், வரும், 25ம் தேதியும், திப்ரூகர் - கன்னியாகுரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22504) வரும், 24ம் தேதி ஒருநாள் மட்டும் திருப்பூரை கடந்து, வழக்கமான வழித்தடத்தில் கோவை ஜங்ஷன் செல்லாது.
மாற்று வழித்தடமான இருகூர் - போத்தனுார் வழியில் பயணிக்கும். பயணிகள் வசதிக்காக மேற்கண்ட ஐந்து ரயில்கள் கோவையில் இரண்டு நிமிடம் நிறுத்தி, பின்னர் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.