
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று குளிர்ந்த காலநிலை நிலவியதால் திருப்பூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது சாரல் மழை பொழிந்தது. இரண்டு நாட்களாக, சாரல் மழையுடன், குளிர்ந்த காற்றும் வீசி வருவதால், பல்லடம் வட்டாரத்தின் காலநிலை முற்றிலுமாக மாறிவிட்டது. திடீரென ஏற்பட்ட இந்த காலநிலை மாற்றத்தால், காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.