ADDED : டிச 31, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்,: பல்லடத்தை சேர்ந்த முருகசாமி 48 என்பவர், நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் பகுதியில், துணிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை, கடையின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. கடையில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், நகராட்சி அதிகாரிகள் கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தினசரி மார்க்கெட் கடைகள் கட்டப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. எனவே, இவற்றின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.