/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சரியும் நிலத்தடி நீர்; வறட்சி அபாயம்! வேளாண்மை துறையினர் 'டிப்ஸ்'
/
சரியும் நிலத்தடி நீர்; வறட்சி அபாயம்! வேளாண்மை துறையினர் 'டிப்ஸ்'
சரியும் நிலத்தடி நீர்; வறட்சி அபாயம்! வேளாண்மை துறையினர் 'டிப்ஸ்'
சரியும் நிலத்தடி நீர்; வறட்சி அபாயம்! வேளாண்மை துறையினர் 'டிப்ஸ்'
ADDED : மார் 15, 2024 12:53 AM
திருப்பூர்;நிலத்தடி நீர்மட்டம் 'கிடுகிடு'வென குறைந்து வரும் நிலையில், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை, வேளாண்மை துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.அதன் விபரம் வருமாறு:பகல் நேர வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வறட்சியில் பயிர்கள் இறந்து போகாதபடி திட்டமிட வேண்டும். இருக்கும் நீரை வைத்து, பயிர் சாகுபடி திட்டமிட வேண்டும். எந்தவொரு பயிருக்கும் அதிகாலை அல்லது, மாலை வேளையில் மட்டுமே நீர்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் கட்டமைப்பு வாயிலாக நீர் பாய்ச்ச வேண்டும்; தெளிப்பு நீர் பாசனத்தை தவிர்ப்பது நல்லது.மணல் மற்றும் சரளை நிலங்களில், ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் நீர் பாய்ச்சுவதை தவிர்த்து, காலை, 30 நிமிடம்; மாலை, 30 நிமிடம் நீர் பாய்ச்சுவது நல்லது.
தென்னங்கீற்றுகளை நீர் செல்லும் வாய்க்காலில் போட்டு விடுவது; தென்னை மட்டைகளை இரண்டாக வெட்டி, நிலத்தில் ஆங்காங்கே வெயில் விழும் பகுதிகளில் போட்டு விடுவது நல்லது.
தென்னை போன்ற பயிர்களின் வட்டப் பாத்தியில் கற்றாழை, தட்டைப்பயிறு வளர்ப்பது, உயிர் மூடாக்காக பயன்படும். தரை அல்லது தொட்டி களில் நீர் சேமிக்கும் போது, பாலிதின் போர்வைகள் அல்லது பச்சை நிழல் வலை கொண்டு மேல் பகுதியை முடிந்த வரை மூடலாம்.
வாழை, மஞ்சள், கரும்பு, நெல்லில் குறைந்தபட்சம், ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாடி தோட்டத்தில், ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் தருவதை தவிர்த்து, சிறிது, சிறிதாக காலை மற்றும் மாலையில் நீர் பாய்ச்சலாம் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

