/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்களிடம் கடிபட்டு இறந்த ஆடுகள் விவரம் சேகரிப்பு; நிவாரணம் அறிவிக்குமா அரசு?
/
நாய்களிடம் கடிபட்டு இறந்த ஆடுகள் விவரம் சேகரிப்பு; நிவாரணம் அறிவிக்குமா அரசு?
நாய்களிடம் கடிபட்டு இறந்த ஆடுகள் விவரம் சேகரிப்பு; நிவாரணம் அறிவிக்குமா அரசு?
நாய்களிடம் கடிபட்டு இறந்த ஆடுகள் விவரம் சேகரிப்பு; நிவாரணம் அறிவிக்குமா அரசு?
ADDED : ஜன 10, 2025 04:24 AM
திருப்பூர் ; நாய்களால் கடிபட்டு இறந்த ஆடு, கோழிகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம் மற்றும் தாராபுரம் பகுதியில் தெருநாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடு, கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 'இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள், பல மாதமாக வலியுறுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்திருக்கிறது.
இந்நிலையில், சட்டசபை கூட்ட தொடர் நடந்து வரும் நிலையில், நாய்கள் கடித்து, இறந்த ஆடு மற்றும் கோழிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில் 'ஒரு ஆடு வாங்க, 13 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. சென்னை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட, இறந்த ஆட்டுக்கு, 4,000 ரூபாய், கோழிக்கு, 100 ரூபாய் அரசின் சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. 'குறைந்தபட்சம், இந்த தொகையையாவது அரசு வழங்க வேண்டும். அல்லது, தெருநாய்களை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் பகுதியில் தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடு, கோழிகளின் விபரம், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தரப்பில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது' என்றனர்.