/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு
/
பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு
ADDED : மே 12, 2025 11:19 PM
உடுமலை,; குடியரசு தினவிழாவின் போது (2026), பத்ம விருதுகள், மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி மற்றும் வர்த்தக துறையில், சாதனை புரிந்தவர்களுக்கு, மாநில அளவில் இவ்விருது வழங்கப்படும்.
இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கையில், 'பத்ம விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபர்கள், ஜூலை 31ம் தேதிக்குள், https://awards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தகுதியான நபர்கள், உரிய கருத்துருவை, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில், வரும் ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்,' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.