/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
/
மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
ADDED : மார் 15, 2025 11:56 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள், 3 பேருக்கு காதொலி கருவியும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 11 பேருக்கும் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக, கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகராஜ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவச்சலம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.