/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.டி.ஓ.,க்கள் மாற்றம் கலெக்டர் உத்தரவு
/
பி.டி.ஓ.,க்கள் மாற்றம் கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 24, 2025 06:31 AM
திருப்பூர் : கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், அலுவலக கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக இருந்தது.
நியமிக்கப்பட்டவர், பணியை ஏற்காமல் விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில், மூன்று பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் பி.டி.ஓ.,கனகராஜ், உதவி இயக் குனர் அலுவலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பணிக்கு நியமிக்கப்பட்டு, பணியேற்பு செய்யாமல் இருந்த விஜயகுமார், திருப்பூர் ஒன்றியத்தின் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் பி.டி.ஓ., வேலுசாமி, பல்லடம் பி.டி.ஓ., வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணிமாறுதல் உத்தரவு, உடனுக்குடன் அமலுக்கு வருவதாகவும், உடனடியாக பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.