/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு
/
பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு
பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு
பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஏப் 30, 2025 12:35 AM
திருப்பூர்,  ;இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளி படிப்பை தொடரச்செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த  கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமைவகித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''வரும் 2025 - 26 கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபின், உயர்கல்வியில் நுாறு சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். வரும் மே மாதத்துக்குள் இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்,'' என்றார்.
இடைநின்ற மாணவர்கள் விவரம், எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகள், பள்ளி நுாலகங்கள் விரிவாக்கம், மாணவர் ஆதார்பதிவு, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பள்ளிகளில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.