நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பல்லடம் ஒன்றியம், அருள்புரத்தில், கலெக்டர் மனிஷ் நாரணவரே நேற்று ஆய்வு நடத்தினார். அருள்புரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ரேஷன் கடையில், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் இருப்பு, அவற்றின் தரம், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் அளவு ஆகியவற்றை பார்வையிட்டார்.
சுண்டமேட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.