/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றில் 'பறந்த' கலெக்டர் உத்தரவு! அவிநாசியில் அனைத்து கட்சியினர் ஆதங்கம்
/
காற்றில் 'பறந்த' கலெக்டர் உத்தரவு! அவிநாசியில் அனைத்து கட்சியினர் ஆதங்கம்
காற்றில் 'பறந்த' கலெக்டர் உத்தரவு! அவிநாசியில் அனைத்து கட்சியினர் ஆதங்கம்
காற்றில் 'பறந்த' கலெக்டர் உத்தரவு! அவிநாசியில் அனைத்து கட்சியினர் ஆதங்கம்
ADDED : ஜன 11, 2025 09:21 AM

அவிநாசி : அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி செய்ய அனுமதிக்காத தலைமையாசிரியரை கண்டித்து அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வக்கீல் விஜயானந்த், ஜெயபால் (அ.தி.மு.க.,), - ஈஸ்வரமூர்த்தி, முத்துசாமி (மா.கம்யூ.,) - முத்துசாமி (இந்திய கம்யூ.,) - கோபாலகிருஷ்ணன் (காங்.,) - பிரசாத்குமார் (தே.மு.தி.க.,) - தினேஷ்குமார் (பா.ஜ.,) - பாபு (ம.தி.மு.க.,) - வக்கீல் சத்தியமூர்த்தி (வி.சி.க.,) - ரவிக்குமார் (நல்லது நண்பர்கள் அறக்கட்டளை) - கார்த்திகேயன் (வணிகர்கள் சங்கம்) உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள கலெக்டர் அனு மதி அளித்தும், அதனை மதிக்காமல், மாணவியருக்கு பாதுகாப்பில்லை என்று வதந்தியை பரப்பி வரும் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிக்கு வாட்ச்மேன் பணியமர்த்துதல், விளையாட மற்றும் நடைப்பயிற்சி செய்வோர் பெயர், மொபைல் போன் எண்ணுடன் பதிவு செய்ய உரிய பதிவேடு பராமரித்தல் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, நாப்கின் எரிக்கும் இயந்திரத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளது, கழிப்பறை கட்டிக் கொடுக்க முன்வந்த நன்கொடையாளரை அவமதித்து அனுப்பியது, பாரதியார் சிலைக்குமாலை அணிவிக்கஎதிர்ப்பு தெரிவித்தது உட் பட பள்ளியின் வளர்ச்சிக்கு தலைமையாசிரியை முட்டுக்கட்டை போட்டு வருவதால், அவரை கண்டித்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

