/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி சேர்க்கை: திருப்பூர் 'நம்பர் 1'
/
கல்லுாரி சேர்க்கை: திருப்பூர் 'நம்பர் 1'
ADDED : ஆக 26, 2025 11:14 PM

திருப்பூர்; தமிழக அரசின் 'நான் முதல்வன் - உயர்வுக்கு படி 2025' திட்ட நிகழ்ச்சி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து வரவேற்றார்.
கலெக்டர் மனிஷ் நாரணவரே, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்கும் கல்லுாரிகளின் பட்டியல் அடங்கிய கையேட்டை வெளியிட்டு, பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு, பிளஸ் 2 முடித்தவர்களில், 97 சதவீதம் பேர் உயர்கல்வியில் இணைந்துள்ளனர்; இது, தமிழக அளவில் முதலிடம். இந்தாண்டு, பிளஸ் 2 முடித்தவர்களில், இதுவரை, 94 சதவீதம் பேர், உயர் கல்வியில் இணைந்துள்ளனர். மீதமுள்ள, 6 சதவீதம் பேரையும் உயர்கல்வியில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போட்டி தேர்வில் பங்கேற்று, அரசு வேலை பெற பட்டப்படிப்பு மிக அவசியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பல்வேறு கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் பயிற்சி கல்லுாரிகள் காட்சி அரங்கு அமைத்திருந்தன. உயர்கல்வி சேர்வோருக்குரிய மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது.