/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி பேரவை துவக்கம்; மாணவியர் உறுதிமொழி
/
கல்லுாரி பேரவை துவக்கம்; மாணவியர் உறுதிமொழி
ADDED : ஜூலை 25, 2025 08:47 PM
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், கல்லுாரி பேரவை துவக்க விழா நடந்தது.
விழாவில், கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். பேரவை ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறை பேராசிரியர் ஏஞ்சல் ஜாய் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி கல்லுாரி பேரவை மற்றும் அதன் மன்றங்கள் பேசினார்.
தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ பிரதிநிதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.
பெரியார் பல்கலை., உளவியல் துறை பேராசிரியர் கதிரவன் 'கல்வியின் நோக்கம், பெண் கல்வியின் அவசியம்' என்ற தலைப்பில் பேசினார். அனைத்துத்துறை பேராசிரியர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். மாணவ செயலாளர் பிரணவ ஸ்ரீ நன்றி தெரிவித்தார்.