/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி பேரவை தேர்தல்; மாணவியர் உற்சாகம்
/
கல்லுாரி பேரவை தேர்தல்; மாணவியர் உற்சாகம்
ADDED : ஜூலை 04, 2025 12:45 AM

திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், 2025 - 2026 ம் ஆண்டுக்கான பேரவை தேர்தல் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வசந்தி தேர்தல் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.
பேரவை தலைவி, செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு, 29 பேர் போட்டியிட்டனர். கல்லுாரியின், 16 துறைகளை சேர்ந்த, 1,016 மாணவியர் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். தேர்தல் அதிகாரி முனைவர் முருகேஸ்வரி செயல்பட்டார். பேரவை பொறுப்பாளர் சுதாதேவி ஒருங்கிணைத்தார். முடிவில், தர்ஷினி பேரவைத்தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிச்சிகாஸ்ரீ துணைத்தலைவியாகவும், செயலாளராக ஆதிரா, பொருளாளராக மோனிகா தேர்வாகினர். நுண்கலைமன்ற பொறுப்பாளர்கள், முதுகலை செயலர், விளையாட்டுத்துறை செயலர், இணைச் செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.