/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இந்தோனேசியா பல்கலையுடன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
இந்தோனேசியா பல்கலையுடன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தோனேசியா பல்கலையுடன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தோனேசியா பல்கலையுடன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மே 18, 2025 10:14 PM
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி, இந்தோனேசியா, பாலியில் உள்ள த்விஜேந்திரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கல்லுாரி செயலாளர் சுமதி, கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி, ஆலோசகர் மஞ்சுளா உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தத்திற்கான பணிகளை மேற்கொண்டனர். கல்லுாரியிலிருந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் சோபனா, விலங்கியல் முதுகலை துறைத்தலைவர் மோகனசுந்தரி, நேரடியாக ஒப்பந்தத்திற்கான மாநாட்டில் பங்கேற்று கையொப்பமிட்டுள்ளனர்.
இதன் வாயிலாக மாணவர் பரிமாற்றம், ஆசிரியர் பரிமாற்றத்திட்டங்கள் மற்றும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து பணிசெய்வது உள்ளிட்ட செயல்பாடுகள், வரும் காலங்களில் நடக்கும் முறையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.