/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி விளையாட்டு விழா; மகிழ்ச்சி அணி சாம்பியன்
/
கல்லுாரி விளையாட்டு விழா; மகிழ்ச்சி அணி சாம்பியன்
ADDED : மார் 16, 2025 11:51 PM

உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் விளையாட்டு தின விழா நடந்தது.
இக்கல்லுாரியில் நடந்த விளையாட்டு தின விழாவில், கல்லுாரி செயலாளர் சுமதி, ஆலோசகர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி வரவேற்றார்.
கல்லுாரி விளையாட்டுத்துறை இயக்குனர் சுஜாதா விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான ஆண்டறிக்கை வாசித்தார்.
தேசிய மாணவர் படை அதிகாரி ராஜலட்சுமி, தேசிய மாணவர் படை மாணவர்களின் செயல்பாடுகளை வாசித்தார். தொடர்ந்து ஒலிம்பிக் விளக்கு ஏற்றப்பட்டது. மாணவியரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருச்சி மாநகராட்சி போலீஸ் உதவி ஆணையர் கதிரவன், சமூக ஊடகங்கள் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டுமென பேசினார்.
தொடர்ந்து மாணவியர், விழாவில் பங்கேற்ற பெற்றோர், குழந்தைகளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லுாரி மகிழ்ச்சி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கல்லுாரி விளையாட்டுத்துறை மாணவ செயலாளர் பவித்ரா நன்றி தெரிவித்தார்.