நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர், விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக், 22. ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லுாரி முடித்து விட்டு, டூவீலரில் அலகுமலை - பெருந்தொழுவு ரோட்டில் சென்றார். சிறிய வளைவில் திடீரென வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், ரோட்டோரம் இருந்த கம்பி வேலியில் மோதியதில், மாணவர் பலியானார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

