/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி மாணவியர் வியந்த ஓவியங்கள்!
/
கல்லுாரி மாணவியர் வியந்த ஓவியங்கள்!
ADDED : மார் 21, 2025 02:09 AM

திருப்பூர்: கலை பண்பாட்டுத்துறை, கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கலைக்கல்லுாரியில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை கண்காட்சி கடந்த, 20ம் தேதி துவங்கியது; இரு நாட்கள் நடந்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதி ஓவியர்களின் ஓவியங்கள், சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கல்லுாரி அனைத்து துறை மாணவியர், பேராசிரியர்கள் பார்வையிட்டனர்.
ஓவியர்கள் பிரகாஷ், சிவபாலன், நிகேஷ், சவுந்தர்ராஜன், மதிநிறைச்செல்வன், நாகராஜ், நந்தகுமார் முதல் பரிசு பெற்றனர்; கீர்த்தனா, சந்திரன், தர்மராஜ், திவ்யா, அபினு, தியாகராஜன், முருகேசன் இரண்டாம் பரிசு பெற்றனர்; ராஜலட்சுமி, கீதாதேவி, ஷானவாஸ், குருபிரகாஷ், ஸ்ரீ ரூபா, முத்துலட்சுமி, தனஸ்ரீ மூன்றாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு எல்.ஆர்.ஜி., கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் பரிசு வழங்கி, பாராட்டினர். மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் பங்கேற்றவர் களுக்கு சான்றிதழ் வழங்கினர்.