/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய வைக்க, இருப்பு செய்ய வாருங்கள்! விற்பனை கூட அதிகாரிகள் அழைப்பு
/
காய வைக்க, இருப்பு செய்ய வாருங்கள்! விற்பனை கூட அதிகாரிகள் அழைப்பு
காய வைக்க, இருப்பு செய்ய வாருங்கள்! விற்பனை கூட அதிகாரிகள் அழைப்பு
காய வைக்க, இருப்பு செய்ய வாருங்கள்! விற்பனை கூட அதிகாரிகள் அழைப்பு
ADDED : பிப் 06, 2025 08:40 PM
உடுமலை; பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விளைபொருட்களை முறையாக சந்தைப்படுத்துவது குறித்து வட்டார விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்காக, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இக்கூடத்தில், விளைபொருட்களை முறையாக சந்தைப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராமன் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் விஜய் வரவேற்றார். கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த தேவையான வசதிகள் உள்ளது.
மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை காய வைத்து தரம் பிரிக்க, 8 உலர் களங்கள் வளாகத்தில் உள்ளன. பொருட்களை 'இ-நாம்' திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விலைவீழ்ச்சி காலங்களில் விளைபொருட்களை விவசாயிகள் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.
இதற்காக, 15,300 மெட்ரிக்., டன் கொள்ளளவுள்ள 3 குடோன்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த குடோன்களில், பாதுகாப்பாக விளைபொருட்களை இருப்பு வைத்து, விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம்.
இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு பொருளீட்டு கடனும் பெறலாம். இதற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் வழங்கப்படும். எனவே, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தை பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டது.

