நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வரும் 30ம் தேதி(நாளை) வைகுண்ட ஏகாதசி விழாவின், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வரும் 3ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.
கோவில் வளாகம் முழுவதையும் வண்ண பெயின்ட் கோலங்களால் அலங்கரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் இன்றும், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் ஜன., 2 அன்றும் கோலமிடும் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவில் வளாகத்திலேயே, பிரஷ் மற்றும் பெயின்ட் உள்ளிட்டவை வழங்கப்படும். கோலமிட ஆர்வமுள்ள பெண்கள், காலை, 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் வந்து, கோலமிடும் சேவைப்பணியில் ஈடுபடலாம்.
சிறந்த கோலங்களுக்கு மாட்டுப்பொங்கல் விழாவில் பரிசு வழங்கப்படும். என, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.

