/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அய்யப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு
/
அய்யப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு
ADDED : டிச 29, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி, கைகாட்டிப்புதுார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின், அவிநாசி கிளை சார்பில் இரண்டாம் ஆண்டு கூட்டு வழிபாடு நேற்று கணபதிஹோமத்துடன் துவங்கியது. 18 வகை திரவியங்களில், அய்யப்பனுக்கு அபிஷேகங்கள் நடந்தன. பின், கூட்டு வழிபாடு, பஜனை நடைபெற்றது.
கைகாட்டிப்புதுார் அய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சேவா சங்க அவிநாசி தலைவர் கிருஷ்ணன், செயலாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

