/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நோக்கம் நல்லதெனில் செயல் வெற்றி பெறும்'
/
'நோக்கம் நல்லதெனில் செயல் வெற்றி பெறும்'
ADDED : டிச 29, 2025 05:12 AM

அவிநாசி: ''நோக்கம் சிறந்ததெனில் செயல் வெற்றியுறும்'' என்று கூனம்பட்டி ஆதினம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் பேசினார்.
அவிநாசி, திருப்புக்கொளியூர் ஸ்ரீ வாகீசர் மடாலய அரங்கில், ஒரு வாரம் நடந்த சிவாலய சைவாகம பூஜாக்ரம முகாம் நிறைவு பெற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஸ்ரீஸ்ரீ குருகுல வித்யார்த்திகள் வேத கோஷம் நடத்தினர். புதுச்சேரி சம்பத் குருக்கள், திருவாசக உரை நிகழ்த்தினார்.
பெங்களூரு ஸ்ரீஸ்ரீ வேதாகம சம்ஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் வரவேற்றார். முகாம் அறிக்கையை டாக்டர் அபிராம சுந்தரம் சிவம் வாசித்தார்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முதல் ஸ்தானிகம் சுப்ரமணிய சிவாச்சார்யார், கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதினம், ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, கூனம்பட்டி ஆதினம் பேசுகையில், ''சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற அவிநாசியில், இந்த முகாம் நடப்பது பொருத்தமானது. நோக்கம் சிறப்பாக இருந்தால் மனதில் நினைக்கும் அனைத்து செயல்களும் வெற்றி பெறும்.
நோக்கம் உயர்ந்ததாக இருந்ததால் தான் முகாம் சிறந்த முறையில் நடைபெற்றது. இந்த பயிற்சி எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும்'' என்றார்.
வாகீசர் மடாலய ஆதினம் ஸ்ரீ காமாட்சி தாச ஏகாம்பரநாத சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
கோவை கே.ஜி. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பக்தவத்சலம், ராக்கியாபாளையம் ஜகன்மாதா ராஜராஜேஸ்வரி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஞானகுரு, அவிநாசி கோவில் முன்னாள் அறங்காவலர் பொன்னுசாமி, சாய்பாபா கோவில் நிறுவனர் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கார்த்திகேய சிவம் நன்றி கூறினார்.

