/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.2.13 கோடி மதிப்பில் பணி துவக்கம்
/
ரூ.2.13 கோடி மதிப்பில் பணி துவக்கம்
ADDED : மார் 05, 2024 11:48 PM
திருப்பூர் :முத்துாரில் 2.13 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவக்கம், 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் திறப்பு விழா ஆகியன நடைபெற்றது.
காங்கயம் நகராட்சி, கே.ஜி.கே., நகரில் துாய்மை இந்தியா திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகம், அம்ரூத் திட்டத்தில், 3வது வார்டில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பூங்கா, சத்யா நகரில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகம் ஆகியன கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் திறப்பு விழா நடந்தது.இதுதவிர, முத்துார் பேரூராட்சியில், 14வது வார்டில் நபார்டு வங்கி நிதியில், 1.42 கோடி ரூபாய் மதிப்பில், தொட்டியபாளையம் முதல் ஊடையம் வரை தார் ரோடு, வாரச்சந்தை அருகே, மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தில், 37.5 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு பணிகள், மகாலட்சுமி நகர், 13வது வார்டில், 33.55 லட்சத்தில் ஆறு பணிகள் என மொத்தம் 2.13 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
இவற்றை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி கமிஷனர் கனிராஜ், தாசில்தார் மயில்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

