/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூ மார்க்கெட்டில் கமிஷனர் ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
/
பூ மார்க்கெட்டில் கமிஷனர் ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
பூ மார்க்கெட்டில் கமிஷனர் ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
பூ மார்க்கெட்டில் கமிஷனர் ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
ADDED : ஜன 08, 2025 12:27 AM
திருப்பூர்; மாநகராட்சி பூ மார்க்கெட் வளாகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தினார்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மார்க்கெட் வந்து செல்கின்றனர். இதுதவிர நுாற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளும், பூ வகைகள் வாங்கிச் செல்வது வழக்கம். இவ்வளாகத்தில், குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனால், நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். கடைகளில் சேகரமாகும் கழிவுகளை அகற்றும் வகையில், வளாகத்தின் பின்பகுதியில் இரு வாகனங்கள் கொண்டு சென்று நிறுத்தி, அவற்றில் கழிவுகள் நிரம்பிய உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளும் தங்கள் கடைகளில் சேகரமாகும் கழிவுகளை கண்ட இடங்களில் குவிக்காமல் அந்த வாகனத்தில் மட்டுமே சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுதவிர, மார்க்கெட் வளாகத்தின் முன்புறத்தில் ரோட்டோரம் உள்ள தள்ளு வண்டிகள், பிளாட்பாரக் கடைகளை அகற்றவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், அங்கு வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

