/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கண்டித்து கமிஷனர் எச்சரிக்கை கடிதம்
/
பெண் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கண்டித்து கமிஷனர் எச்சரிக்கை கடிதம்
பெண் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கண்டித்து கமிஷனர் எச்சரிக்கை கடிதம்
பெண் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கண்டித்து கமிஷனர் எச்சரிக்கை கடிதம்
ADDED : ஜூன் 05, 2025 02:25 AM
திருப்பூர்:'திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு அதிகளவில் உள்ளது.
தலையீடுகள் தொடர்ந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, பெண் கவுன்சிலர்களுக்கு கடிதம் மூலம் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு நகராட்சி நிர்வாகத்தில் அதிகமாக இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான நிர்வாகம் நடக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர், பெண் கவுன்சிலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
நகராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி, பெண் கவுன்சிலர்கள் சுஜினி, தங்கம் பூபதி, பார்வதி ஆகிய பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், அதிகளவில் நகராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்கின்றனர்.
இது, நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 2003ன் படி, ஏற்புடையதல்ல. இனிவரும் காலங்களில், இதுபோன்ற தலையீடுகள் இருந்தால், உரிய விதிகளின்படி, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.