/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மையை பேணிக்காக்க கமிஷனர் அறிவுறுத்தல்
/
துாய்மையை பேணிக்காக்க கமிஷனர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 09, 2025 12:10 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் 'விசிட்' அடித்த புதிய கமிஷனர், ஸ்டேஷன் உட்புறம், வெளியே துாய்மையாக வைக்க அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் போலீஸ் கமிஷனராக சில நாட்களுக்கு முன் ராஜேந்திரன் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற அடுத்த நாள் முதல் காலை, மாலை நேரங்களில் மாநகரத்தை வலம் வருகிறார். நல்லுார், வீரபாண்டி உள்ளிட்ட சில ஸ்டேஷன்களுக்கு திடீர் 'விசிட்' அடித்தார். நம்மை நாடி வரும் மக்களை அலைக்கழிக்க கூடாது, அவர்கள் பிரச்னை என்னவென்று விசாரிக்க வேண்டும். ஸ்டேஷன் உட்புறம் மற்றும் வெளியே துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, பல அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, மூன்று பஸ் ஸ்டாண்ட்களை பார்வையிட்டு, பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம், போலீஸ் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்து ஆலோசித்து சென்றார்.
மேலும், இன்னும் ஒரு வார காலத்துக்கு நகர பகுதியை முழுமையாக ஆய்வு செய்த பின், என்னென்ன விஷயங்களை செய்யலாம் என்பதை, துணை கமிஷனர் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசனை செய்ய உள்ளார்.

