/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி; பள்ளிகளின் சாரணர்கள் பங்கேற்பு
/
தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி; பள்ளிகளின் சாரணர்கள் பங்கேற்பு
தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி; பள்ளிகளின் சாரணர்கள் பங்கேற்பு
தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி; பள்ளிகளின் சாரணர்கள் பங்கேற்பு
ADDED : அக் 21, 2024 11:27 PM

உடுமலை : உடுமலை, ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணியர்களுக்கான தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியான ஜோட்டா - ஜோட்டி நிகழ்ச்சி நடந்தது.
உடுமலையில் அமெச்சூர் வானொலி நிலையம் உரிமம் பெற்ற ஆர்.ஜி.எம் மேல்நிலைப்பள்ளியில், சாரண சாரணியர்களுக்கான தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியான ஜோட்டா - ஜோட்டி நடந்தது.
பள்ளி முதல்வர் சகுந்தலாமணி வரவேற்றார். பள்ளி செயலாளர் நந்தினி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவசக்தி காலனி, சோழமாதேவி, மலையாண்டிபட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளிகள், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி, ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை, பெதப்பம்பட்டி, மானுார்பாளையம் ஆர்.ஜி.எம்., பள்ளிகள், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் பள்ளி, அன்னை அபிராமி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலிருந்து சாரணர்கள் பங்கேற்றனர்.
ேஹம் ரேடியோ ஆப்பரேட்டர்ஸ்களின் ஒத்துழைப்புடன், இப்பள்ளிகளைச் சேர்ந்த சாரணர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சாரணர்களிடம் அமெச்சூர் வானொலி நிலையத்தின் வாயிலாக, செய்திகள், தகவல்கள், கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து மாணவர்களுக்கு கம்பு மாற்றி பிடித்தல், கூட்டு கம்புகளில் நுழைந்து வருதல், இருபக்க உருளிப்பட்டை தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தன.
பங்கேற்ற மாணவர்களின் பள்ளி பொறுப்பாசிரியர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.