/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுப்பர்பாளையத்தில் சமுதாய கூடம் திறப்பு
/
அனுப்பர்பாளையத்தில் சமுதாய கூடம் திறப்பு
ADDED : ஜூலை 07, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; எம்.பி. தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் திருப்பூர் மாநகராட்சி, 11வது வார்டு அனுப்பர்பாளையம் புதுக்காலனி பகுதியில் 13.70 லட்ச ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை மற்றும் 29.50 லட்ச ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
திறப்பு விழா வார்டு கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அமித், முன்னிலை வகித்தார்.எம்.பி. சுப்பராயன், ரேஷன் கடை மற்றும் சமுதாய கூடத்தை திறந்து வைத்து பேசினார்.
மேயர் தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க., நிர்வாகிகள் தங்கராஜ், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.