ADDED : ஜன 27, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; குடியரசு தினமான நேற்று தொழிலாளர் துறை அதிகாரிகள் திருப்பூர், தாராபுரம், உடுமலை சுற்றுப் பகுதிகளில் 30 கடைகள், 43 உணவு நிறுவனங்கள் உட்பட, 74 இடங்களில் ஆய்வு நடத்தினர்; 26 கடைகள்; 40 உணவு நிறுவனங்கள் என, 66 இடங்களில், விதிமுறைகள் சரிவர பின்பற்றி விடுமுறை அளிக்கப்படாமல் இருந்தது.
திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் கூறுகையில்,''மாவட்டம் முழுவதும், இன்று (நேற்று) ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 74 நிறுவனங்களில் ஆய்வு நடத்தியதில், குடியரசு தினவிழா விடுமுறை விதிகளில், 66 முரண்பாடுகள் இருந்தது தெரிய வந்தது; சம்பந்தப்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.