/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழியில் 3 பேர் பலி இழப்பீடு வழங்க வேண்டும்!
/
பாறைக்குழியில் 3 பேர் பலி இழப்பீடு வழங்க வேண்டும்!
பாறைக்குழியில் 3 பேர் பலி இழப்பீடு வழங்க வேண்டும்!
பாறைக்குழியில் 3 பேர் பலி இழப்பீடு வழங்க வேண்டும்!
ADDED : ஜன 28, 2025 06:53 AM
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் அறிக்கை:
திருப்பூர், 63 வேலம்பாளையம், இடுவாயை சேர்ந்த ரேவதி, அவரின் இரு மகள்கள் என, மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள செயல்படாத பாறைக்குழியில் துணி துவைக்க சென்ற போது, நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு பா.ஜ., ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இந்த இழப்புக்கு, தமிழக அரசு உடனடியாக, சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், வரக்கூடிய கால கட்டங்களில் மக்களின் உயிருக்கு ஊறுவிளைக்கும் வகையில் உள்ள செயல்படாத குவாரிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற உயிர் சேதங்கள் நடைபெறாத வகையிலும், தமிழக அரசையும், சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளர்களையும் திருப்பூர் பா.ஜ., கேட்டு கொள்கிறது. இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

