/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவள்ளுவர் தின விழா மாணவர்களுக்கு போட்டி
/
திருவள்ளுவர் தின விழா மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜன 07, 2025 10:59 PM

உடுமலை; உடுமலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி, மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய, திருவள்ளுவர் தின விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அமைப்புகள் சார்பில் இவ்விழா நடக்கவுள்ளது.
இந்நிலையில், கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொது நுாலகத்துறை சார்பில் பள்ளி மாணவர்ளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் கருத்தரங்கம் போட்டி நடந்தது.
மாநில அரசின் அறிவிப்பின்படி, உடுமலை முதற்கிளை நுாலகத்தின் சார்பில், கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் கருத்தரங்கம் போட்டி நடந்தது. பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டாரக்கல்வி அலுவலர் ஏஞ்சலின் பிருந்தா தலைமை வகித்தார். ஆசிரியர் காயத்ரி வரவேற்றார். ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதற்கிளை நுாலக நுாலகர் பீர்பாஷா, மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஆசிரியர் நாகவேணி நன்றி தெரிவித்தார்.