/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொட்டுநீர் மானியம் முறைகேடு புகார்; வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
/
சொட்டுநீர் மானியம் முறைகேடு புகார்; வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
சொட்டுநீர் மானியம் முறைகேடு புகார்; வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
சொட்டுநீர் மானியம் முறைகேடு புகார்; வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
ADDED : ஜூலை 10, 2025 11:24 PM
திருப்பூர்; சேவூரில் விவசாய நிலத்தில் சொட்டு நீர் பாசன உபகரணங்கள் பொருத்தியதில் முறைகேடு புகார் எழுந்தது தொடர்பாக வேளாண் இணை இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார்.
அவிநாசி ஒன்றியம், சேவூர், கனடாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம். இவரது கரும்பு தோட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனம் ஏற்படுத்த கடந்த, 2022ல், சேவூரில் உள்ள ஒரு ஏஜன்சியை அணுகினார். அரசு மானியத்துடன் அந்நிறுவனம் பொருத்த முன் வந்தது. ஆனால், முழு அளவில் உபகரணங்கள் பொருத்தவில்லை. இது குறித்து கேட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற நிலையில், அவர் செலவிட்டு மீத உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்தினார்.
மேலும் இதற்கான அரசு மானியத்துக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கடிதத்தில், 1.65 லட்சம் ரூபாய் மானியம் எனக் குறிப்பிட்டிருந்தது. தன்னிடம் கூறிய, 1.24 லட்சம் ரூபாய் மானியம் என்பதால், அதில் கையொப்பமிட ஞானப் பிரகாசம் மறுத்து, இது குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு புகாரும் அனுப்பினார்.
இதுகுறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதனால், உபகரணங்கள் வழங்கும் நிறுவனம் அவரைத் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றது. மேலும் இதை சப்ளை செய்த ஏஜன்சி இது போன்ற முறைகேடு காரணமாக ஏஜன்சி ரத்து செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, இது குறித்து நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தது. மேலும், வேளாண் இணை இயக்குநர் சுந்தர வடிவேலு மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, உரிய உபகரணங்கள் அனைத்தும் முழுமையாகப் பொருத்தியும், கூடுதலாக ஞானப் பிரகாசம் செலவிட்ட தொகையையும் திருப்பி வழங்கினர்.