/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூவோடு வைக்கும் தொட்டி மண் கொட்டி மூடியதாக புகார்
/
பூவோடு வைக்கும் தொட்டி மண் கொட்டி மூடியதாக புகார்
ADDED : பிப் 14, 2025 04:07 AM

பொங்கலுார்; கொடுவாய் மாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவுக்கு, கொடுவாய், வெள்ளியம்பாளையம், சக்தி விநாயகபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பூவோடு எடுத்து வருவர். பொதுமக்கள் எடுத்து வரும் பூவோடு பூஜை முடிந்த பின் கிணற்றில் விடப்படும்.
கொடுவாய், கிராமமாக இருந்து நகரமாக வளர்ந்ததால், கிணறுகள் காணாமல் போனது. கோவில் அருகிலேயே தொட்டி கட்டி , அதில் விட்டு வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் கொடுவாய் ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அப்போது, தொட்டியை மண் கொட்டி மூடி விட்டனர். ஊராட்சி நிர்வாகத்தில் அந்தத் தொட்டியை மீண்டும் சுத்தப்படுத்தி கோவிலுக்கு ஒப்படைக்குமாறு பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. இன்னும் இரண்டு வாரங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. ஊராட்சி நிர்வாகம் மவுனமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

