/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
/
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
UPDATED : மார் 20, 2026 06:37 PM
ADDED : மார் 20, 2026 05:26 PM
திருப்பூர்: காங்கயம் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணி துவங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான கருத்து, புகார் தெரிவிக்க மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கயம் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக திருப்பூர் மாவட்ட கலால் உதவி கமிஷனர் பாலமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக காங்கயம் தாசில்தார் தங்கவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்க ஏதுவாக, காங்கயம் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர் மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கயம் தொகுதிக்கு சுதாவர்மா, மொபைல் போன்: 9944681624. இவரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க விரும்பினால், காங்கயம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை அறை எண்: 2 ல். தினமும் காலை 11:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை சந்திக்கலாம். தொகுதிக்கான தேர்தல் போலீஸ் பார்வையாளராக ராகுல் ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை தொடர்பு கொள்ள, 88077 02867. இவரை கலெக்டர் அலுவலக விருந்தினர் மாளிகையில், அறை எண் 4 ல் காலை, 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை சந்தித்து புகார் தெரிவிக்கலாம். வரும், 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் துவங்க உள்ளனர்.

