/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணபுரம் கால்நடை திருவிழா: தேர்தல் விதியால் ஒத்திவைப்பு
/
கண்ணபுரம் கால்நடை திருவிழா: தேர்தல் விதியால் ஒத்திவைப்பு
கண்ணபுரம் கால்நடை திருவிழா: தேர்தல் விதியால் ஒத்திவைப்பு
கண்ணபுரம் கால்நடை திருவிழா: தேர்தல் விதியால் ஒத்திவைப்பு
ADDED : மார் 20, 2026 05:23 PM
திருப்பூர்: சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கண்ணபுரம் கால்நடை திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற கண்ணபுரம் காங்கயம் இன கால்நடை தேர்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும்.'இந்தாண்டு திருவிழாவை, அடுத்த மாதம், 17ம் தேதி நடத்துவது' என கோவில் நிர்வாகத்தினரும், ஊர் மக்களும் முடிவெடுத்திருந்தனர். விழாவில் விவசாயிகள், வியாபாரிகள் திரளாக பங்கேற்று, விற்பனைக்கென, கால்நடைகளை கொண்டு வருவது வழக்கம்.
தற்போது சட்டசபை தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால், பெரும் தொகையை பரிவர்த்தனை செய்ய முடியாது என்பதால், தேர்தல் முடிந்த பின், கால்நடை தேர்த்திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர். 'அடுத்த மாதம், 24ம் தேதி, காலை முதல் தேர்த்திருவிழா நடைபெறும்' என கோவில் நிர்வாகம் மற்றும் கண்ணபுரம் மற்றும் பச்சாபாளையம் கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.