/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் கவலை
/
50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் கவலை
50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் கவலை
50 வயதை நெருங்கியும் பணி நிரந்தரம் இல்லை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் கவலை
ADDED : ஜூன் 20, 2025 11:31 PM
திருப்பூர் : பேரூராட்சிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், 22 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் நிலையில், எதிர்காலம் குறித்த குழப்பம், அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள பேரூராட்சிகளில், கடந்த, 2003ல் நிர்வாகப்பணி அனைத்தும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டது. கம்ப் யூட்டர் ஆபரேட்டர் பணியிடம் உருவாக்கப்படாததால், தற்காலிக அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
பேரூராட்சி வரவு, செலவு அறிக்கை, வளர்ச்சிப்பணிகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கம்ப்யூட்டர் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்கால கட்டத்தில், மாநிலத்தில், 559 பேரூராட்சிகள் இருந்தன. அந்தந்த மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச சம்பளம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டது.
'பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கி, தற்போது வரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித பலனும் இல்லை.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பேரூராட்சிகள் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, நகராட்சியாக மாறி வருகின்றன. இதனால், பேரூராட்சிகளின் எண்ணிக்கை, 490 என குறைந்துள்ளது.பேரூராட்சி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களின் பணி நிரந்தரம் குறித்து, எவ்வித முன்னேற்றமும் தென்படாத சூழலே உள்ளது.
எதிர்காலம் என்னாகுமோ!
கடந்த, 22 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களில், பெரும்பாலானவர்கள், 50 வயதை நெருங்கவுள்ளனர். சம்பளம் தவிர, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகள் எதுவும் கிடையாது. இனி, வேறெங்கும் வேலைக்கு செல்ல முடியாது என்ற சூழலில், எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. அரசுத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது, தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- பேரூராட்சிகளில் பணிபுரியும்கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள்.