ADDED : செப் 04, 2025 11:33 PM
ஹிந்து வியாபாரிகள் நல சங்க மாநில தலைவர் ஜெயக்குமார் அறிக்கை:
உலகளவில் பாரத நாடு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. அதற்கான வழிவகைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது. சிறு வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிமையாக ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள், மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் ஜி.எஸ்.டி., கொண்டு வரும் போது, பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த ஜி.எஸ்.டி., இருப்பதால் மட்டுமே இன்று ராணுவம், உள்துறை மற்றும் வெளியுறவத்துறை ஆகியவைகளின் செயல்பட்டால் பாரத நாடு மிக சிறப்பாக வளர்ந்து வருகிறது.
தற்போது வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் வியாபாரிகளின் மீது அக்கறை கொண்ட பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி.,மீது, சில சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார். இதன் மூலம், சிறு வணிகர்கள் மேம்படுவார்கள். பெரும் வணிகர்களுக்கும் தனது தொழில் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும். இந்த நல்ல திட்டத்துக்கு ஜி.எஸ்.டி., கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு ஹிந்து வியாபாரிகள் நல சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் கூறி கொள்கிறது.